2025 ஜூன் 18, புதன்கிழமை

ஜீ.ஜீ.பொன்னப்பலத்தின் 37ஆவது நினைவு தினம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


தமிழ் காங்கிரஸ் தலைவரும் சட்டமாமேதையுமான ஜீ.ஜீ.பொன்னம்பத்தின் 37ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

தழிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் ஏற்பாட்டில் குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள அவரின் உருவச் சிலைக்கு இன்று காலை 9 மணியளவில் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினர் பரஞ்சோதி மற்றும் தழிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் செயலாளர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்றில் 50ற்கு 50 தீர்மானத்தினை கொண்டு சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொடுத்த இவர் 1977ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .