2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்டத்தில் 42 எயிட்ஸ் நோயாளர்கள்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 42 எயிட்ஸ் நோயாளர்களில் 23 நோயாளர்கள் இறந்துள்ளதுடன் 19 நோயாளர்கள் வாழ்ந்து வருவதாகவும் இந்த எண்ணிக்கை எதிர்வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏ - 9 தரைவழிப்பாதையின் திறப்பு மற்றும் நீண்டகாலப் போர் அதனாலான இடப்பெயர்வுகள் போன்றவற்றினால் கலாச்சார விழுமிய கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டு விட்டதாகவும் இதனாலேயே இவ்வாறான நோய்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X