2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். வைத்தியசாலையில் ஒரு மாதத்தில் 5 கர்ப்பிணிகள் மரணம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 07 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலத்தில் 5 கர்ப்பிணித்தாய்மார்கள்  உயிரிழந்துள்ளதாக அந்த வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்துள்ளார்.

சுகாதார மகப்பேற்று நிலையங்களில் இக்கர்ப்பிணித்தாய்மார்கள் பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவையை முறையாகப் பெற்றுக்கொள்ளாமையே உயிரிழப்புக்களுக்கான காரணம் எனவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்

குடும்ப நல உத்தியோகத்தர்கள் கர்ப்பிணித்தாய்மார்களின் மீது மிகுந்த கவனம் எடுக்க வேண்டும் எனவும் இவர்களுக்கு போதுமான அறிவூட்டல்கள் இல்லாமையே  கர்ப்பிணித்தாய்மார்களின் உயிரிழப்புக்களுக்கு காரணம் எனவும் சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார மகப்பேற்று நிலையங்கள் கூடுதலாக சேவையாற்ற வேண்டியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்துள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X