2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இடம்பெயர்ந்த மக்களுக்கென இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ள 50 வீடுகள் அன்பளிப்பு

Super User   / 2010 நவம்பர் 20 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)

இடம்பெயர்ந்த மக்களுக்கென இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ள 50 வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று  சனிக்கிழமை காலை  புளியங்குளம், பெரியகுளம் கிராமத்தில் நடைபெற்றது.

அமெரிக்காவில் உள்ள ஒரு பௌத்த  அமைப்பின் உதவியை பெற்று இராணுவ நலன்புரி நிலையத்தின் 56ஆவது படைப்பிரிவினரால் வீடுகள் அமைக்கப்பட்டது.

வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர்   ஜீ.ஏ.சந்திரசிறி, பௌத்த அமைப்பின் இணைப்பாளர் ஜயட்டி ராவன விமல தேரோ, வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எம்.எஸ்.சாள்ஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X