2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கலைமுகம் சஞ்சிகையின் 50ஆவது இதழ்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ‘கலைமுகம்’ சஞ்சிகையின் 50 ஆவது இதழ் வெளியீடு நேற்றுக்  காலை 10.30 மணியளவில் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.

கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஊடகவியலாளர்களான ஐங்கரநேசன், கோ.றுஷாங்கன் மற்றும் யாழ். பல்கலைக்கழக சமூகவியல் துறை விரிவுரையாளர் ராஜேஷ் கண்ணன்,  கீரிமலை நகுலேஸ்வர வித்தியாலய அதிபர் சிறிக்குமரன், திருமறைக் கலாமன்ற இயக்குநர் மரியசேவியர் அடிகள் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

இறுதியில் சஞ்சிகையின் ஆசிரியர் செல்மர் எமில் ஏற்புரை நிகழ்த்தினர். இலக்கியவாதிகள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X