Super User / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
பருத்தித்துறை சந்தைக் கட்டடத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் 50 மில்லியன் ரூபா செலவில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
'நெக்டொப்' நிறுவனத்தின் நிதியுதவியுடன் 100 மில்லியன் ரூபா செலவில் இச்சந்தை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பணிகள் நிறைவடைந்த பின்னர் சந்தை திறந்து வைக்கப்படும் என்று பருத்தித்துறை நகர சபையினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பருத்தித்துறைக்கு விஜயம் செய்த யாழ். அரசஅதிபர் நவீன சந்தையின் நிலைவரங்களைப் பார்வையிட்டு 50 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டதை அடுத்து இரண்டாம் கட்டப்பணிகளுக்கு பொருளாதார அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago