Super User / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
கொடிகாமம் சாவகச்சேரிப் பகுதிகளில் மதுபோதையில் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் தலா ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இவர்களுக்கு 2 வாரகால கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் நீதிபதி ஏன்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறின் மேலும் ஒருமாத காலத்துக்கு சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago