Super User / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
வசாவிளான் மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு 60 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் ப. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் ஆயிரம் பாடசாலைகளின் கல்வித்தரத்தை உயர்த்தும் திட்டத்தின் கீழ், யாழ். மாவட்டத்தில் 90 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் வசாவிளான் மகாவித்தியாலயமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பாடசாலையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
1946ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையானது இடம்பெயர்ந்த நிலையில் இயங்கிய போதும் தனது கட்டுக்கோப்புக் குலையாது செயற்பட்டுள்ளது. தற்போதும் 1,350 மாணவர்களுடன் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது- என்றார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago