Super User / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் சுகாதார நெடுக்கடிகளைத் தீர்க்கும் முகமாக 75 சிற்றூழியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். போதனா வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சந்திப்பு ஒன்று நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்த கொண்டனர். இந்தக் கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தற்போது வைத்தியசாலையில் சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றுவோரில் 75 பேர் இவ்வாறு சிற்றூழியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலைக்குத் திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு சுகாதார நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார். இதன்போது சிற்றூழியர் பற்றாக்குறையால் வைத்தியசாலையில் சுகாதார வேலைகளை உரியவகையில் மேற்கொள்ள முடியவில்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago