2025 ஜூன் 21, சனிக்கிழமை

இதுவரையில் 8017 படகுகள் பதிவு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)   

யாழ்ப்பாணத்தில் இதுவரையில் 8017 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். பிராந்திய பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி இன்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட 14 பிரதேசங்கள் இப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆழியவளையில் 357 படகுகளும் தாளையடியில் 440 படகுகளும் பருத்தித்துறை கிழக்கில் 1060 படகுகளும் பருத்தித்துறை மேற்கில் 1029 படகுகளும்  காங்கேசன்துறை கிழக்கில் 611 படகுகளும் காங்கேசன்துறை மேற்கில் 214 படகுகளும் சண்டிலிப்பாயில் 445 படகுகளும் சுழிபுரத்தில் 672 படகுகளும் ஊர்காவற்றுறையில் 614 படகுகளும் நெடுந்தீவில் 386 படகுகளும் வேலணையில் 735 படகுகளும் யாழ்ப்பாணம் மேற்கில் 935 படகுகளும்  யாழ்ப்பாணம் கிழக்கில் 344 படகுகளும்  சாவகச்சேரியில் 175 படகுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பதிவு செய்யப்படாத படகுகளுக்கு கடலுக்குச் செல்ல அனுமதியில்லையெனவும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். பிராந்திய பணிப்பாளர்  தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .