2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

‘2 கோடி பெற்றிருந்தால், ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்’

Editorial   / 2018 ஜனவரி 26 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“நான் 2 கோடி ரூபாய் நிதியை பெற்றிருந்தால், அதனை ஆதாரத்துடன் உறுதிப்படுத்துமாறு” நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தமைக்காக, அரசாங்கத்திடமிருந்து தலா 2 கோடி ரூபாய் பெற்றதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியிருத்தார்.

இந்நிலையில், இன்று (26) காலை யாழிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பிலேயே சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்திடமிருந்து 2 கோடி ரூபாய், நான் பெற்றதாக கூறினால் அதனை சிவசக்தி ஆனந்தன் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.

அவ்வாறு நிதியை, நானோ, கட்சி தலைவர் இரா.சம்மந்தனோ பெறவில்லை. வேறு யாராவது பெற்றார்களா, இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது.

மேலும், தான் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் ஊடக அரசியலுக்கு வந்ததாக சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு இல்லை.  அக் கட்சியினர் தற்போது எனக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அவர்கள் கடந்த காலங்களில் கொலைகள், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்தனர். அதனாலேயே தற்போது வரை அதன் தலைவரும், செயலாளரும் கனடா நாட்டுக்கு செல்ல முடியாதுள்ளது.

அவர்கள் இதுவரை காலமும் எம்மோடு இணைந்து பணியாற்றியதால் அவர்களைப் பற்றி பேசாதிருந்தோம். தற்போது அவர்களின் கடந்தகால செயற்பாடுகள் குறித்து பேச வேண்டி ஏற்பட்டுள்ளது.

ஆகவே அவர்களின் கடந்த கால வரலாறுகளை மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது. இதனால் இனி அவர்கள் அடக்கி வாசிக்க வேண்டும். இருந்தும் அவர்கள் தொடர்ந்தால் நாங்களும் பதிலடி கொடுக்க தயாராகவே உள்ளோம். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிய வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .