Super User / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
நல்லூர் ஆலயத் தேர்த்திருவிழாவின் போது தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான ‘பாவுள்’ விற்பனை ஆலயச்சூழலில் அமோகமாக நடைபெற்றதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றபோது, ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இவர்களில் கூட்டமாக வரும் இளைஞர்களை அணுகிய சிலர் தம்மிடம் போதைப்பொருளான ‘பாவுள்’ விற்பனைக்கு இருப்பதாகவும், தேவையானால் அருகிலுள்ள வெற்றிலைக்கடையை சுட்டிகாட்டி அங்கு வரும்படியும் கூறியுள்ளனர்.
இதனால் சில இளைஞர்கள் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான ‘பாவுள்’ அடங்கிய பீடாவை வாங்கி சுவைத்ததாகவும் அதன் பின் போதை தலைக்கேறி நிலைதடுமாறிய வண்ணம் நடமாடித்திரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பக்திபூர்வமான ஆலயச்சூழலில் இத்தகைய போதைப்பொருள்களின் விற்பனையை ஏன் எவருமே தடுக்க முன் வரவில்லை எனப் பொது மக்கள் பலரும் விசனம் தெரிவித்தனர்.
இதேவேளை, இவ்விடயம் குறித்து யாழ். பொலிஸாருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறான எந்தவொரு சம்பவமும் ஆலயச் சூழலில் இடம்பெறவில்லை என்று தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago