2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கை வங்கியின் அபிவிருத்திக் கிராம அறிமுக விழா

Super User   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ஞான செந்தூரன்)

இலங்கை வங்கியின் அச்சுவேலிக் கிளையின் மூன்றாவது அபிவிருத்திக் கிராமமான சிறுப்பிட்டி தெற்கு கலைஒளி கிராமத்தின் அறிமுகவிழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

கலைஒளி சனசமூக நிலையத் தலைவர் க. கிருபாகரன் தலைமையில் நடைபெறவுள்ள அறிமுக நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை வங்கியின் பிரதிப் பொதுமுகாமையாளர் ஐ.டி. வீரசேன கலந்துகொள்ளவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக  வடபிராந்திய உதவிப் பொது முகாமையாளர் கே.ஈ.டி. சுமணசிறி, பிராந்திய செயற்பாட்டு முகாமையாளர் வி.எஸ்.சிவநாதன், யாழ்.மாவட்ட முகாமையாளர் கே.பி.ஆனந்தநடேசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X