Super User / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பகுதியின் அபிவிருத்திப் பணிக்கு நிதியுதவி செய்ய உலகவங்கி முன்வந்துள்ளது.
உலகவங்கியின் பிரதிநிதிகள், யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை கடந்த வியாழக்கிழமை சந்தித்த போதே மேற்கண்ட உறுதிமொழி வழங்கப்பட்டதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வடமராட்சி கிழக்குப் பகுதியில் தற்போது மக்கள் மீளக்குடியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யுத்தத்தின் காரணமாக சிதைந்து போன இப்பகுதியை அபிவிருத்தி செய்து, பழையநிலைக்கு கொண்டுவர உலகவங்கி பல உதவிகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் மருதங்கேணி வைத்தியசாலை, சோரன்பற்றுப் பாலம், மற்றும் வடமராட்சி கிழக்கில் உள்ள வீதிகள் என்பவற்றைப் புனரமைக்க உலகவங்கி நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.
இத்திட்டங்களுக்கான மதிப்பீட்டுப்பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago