2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாணவனை பாம்பு தீண்டியது

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கண்ணன்)

பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவன் வீதியின் குறுக்கே காணப்பட்ட ஓலையை எடுத்து அப்புறப்படுத்தியவேளை அதனுள் இருந்த பாம்பினால் அந்த மாணவன் கடியுண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தென்மராட்சி, வரணியில் நேற்று காலை 7 மணியளவில் இடம்பெற்றது.

வரணி தெற்கைச் சேர்ந்த காந்தராசா சயிந்தன் (வயது16) என்ற மாணவனே இவ்வாறு கடியுண்டவராவார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்திய சாலைக்கு இவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X