Super User / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் கல்விகற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினர் ஒரு லட்சம் ரூபா நிதியுதவி செய்துள்ளனர்.
இந்த நிதி வறுமைக்கோட்டின் கீழ் உள்ள கல்லூரியில் கற்கும் 4 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று கல்லூரி மண்டபத்தில் அதிபர் க.அருந்தவபாலன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் மக்கள் வங்கியின் சாவகச்சேரி கிளை முகாமையாளர் க. சண்முகலிங்கம், தென்மராட்சி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொ. ரவிச்சந்திரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
கனடாவில் வாழும் கல்லூரியின் பழைய மாணவர்கள் வருடந்தோறும் இவ்வாறான உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கல்லூரியின் பழைய மாணவியான திருமதி தயாபரன் பிரமிளா கல்லூரிக்கென ஒளிபரப்பு சாதனங்களையும் இந்த நிகழ்வில் வைத்துப் பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago