Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
யுத்தத்தால் கணவன்மார்களை இழந்தவர்களுக்கு சகல வழிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பரந்தன் நகர கிராம சேவையாளர் பிரிவு மக்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பரந்தன் நகர கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
இதில் குறிப்பாக அக்கிராமத்தில் வசிக்கின்ற 640 குடும்பங்களில் 360 குடும்பங்களுக்கு காணி இல்லையெனவும் அதற்கு தாங்கள் தீர்வினைப் பெற்றுத் தருமாறும் கோரப்பட்டது.
மிக நீண்டகாலமாக சில காணிகளில் அம்மக்கள் வசித்து வருகின்றமையால் அம்மக்களுக்கே அக்காணிகளை வழங்குவது தொடர்பாக பிரதேச செயலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் காணிக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டு அக்காணிகளை வழங்குவது தொடர்பில் தீர்வு பெறப்பட்டு அம்மக்களுக்கு உடன் தெரியப்படுத்தப்படும் என சந்திரகுமார் எம்.பி பதிலளித்தார்.
மேலும் இக்கிராமத்திற்கான வீதி, முன்பள்ளி மற்றும் மக்களின் தற்காலிக, நிரந்தர வீடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்பாக அவர்களது உடனடி அடிப்படைத் தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்வது தொடர்பாகவும் தான் கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் சந்திரகுமார் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிராம அலுவலர் அம்பிகைபாலன், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், மாதர் சங்கத் தலைவி மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago