2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘உலகதரிசனம்’ நிறுவனத்தின் நிதியில் அராலிப்பகுதியில் புதிய நீர்த்தாங்கி

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(சரண்யா)

வலிகாமம் மேற்கில் உள்ள அராலி, வட்டுக்கோட்டை பகுதி மக்களின் குடிதண்ணீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர ‘உலகதரிசனம்’ நிறுவனத்தின் நிதியுதவியுடன் அராலிப்பகுதியில் பாரிய நீர்த்தாங்கி ஒன்று புதிதாக அமைக்கப்படவுள்ளது என்று வலி.மேற்கு பிரதேசசபைச் செயலாளர் சு.புத்திசிகாமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

அராலி, வட்டுக்கோட்டைப் பகுதி மக்களின் குடிதண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய 1958 ஆம் ஆண்டளவில் ‘கல்வனைஸ்’மூலம் அராலிப் பகுதியில் நீர்த்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டது.

எனினும் அது அமைக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டதால், அந்தத்  தாங்கி தற்போது சேதமடந்துள்ளது.

அத்துடன் முன்பிருந்ததை விடவும் இப்பகுதியில் சனத்தொகையும் அதிகரித்துள்ளது. இதனால் முன்னர் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி மூலம் விநியோகிக்கப்பட்டு வரும் குடிதண்ணீர்  மக்கள் அனைவரினதும் நன்னீர்த்தேவையைப் பூர்த்தி செய்யப்போதுமானதல்ல.

பொதுமக்களால் இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இதனைக்கருத்தில் கொண்டு உலகதரிசனம் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அராலிப்பகுதியில் பாரிய நீர்த்தாங்கி ஒன்றைப் புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய நீர்த்தாங்கி அமைக்கப்படுவதன் மூலம் அராலிப்பகுதியில் உள்ள 5 கிராமசேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் நன்மையடைவர்.அவர்களின் குடிதண்ணீர் பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிடும்.-என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X