A.P.Mathan / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அதிபரினால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை எட்டு மாணவர்களும் ஒரு பழைய மாணவனும் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரித்ததன் பின் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்.
மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதையிட்டு பழைய மாணவர்கள் ஒரு சாராருக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையே எற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக 'மகாஜனாவில் பற்றுள்ள புதல்வர்கள்' என்ற பெயரில் துண்டுப் பிரசுரம் அடித்து வெளியிடப்பட்டு வந்தது.
கல்லூரியின் நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக விடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை இன்று பாடசாலை மாணவர்களுக்கு குறிப்பிட்ட மாணவர்கள் கல்லூரியின் வெளி வாசலில் வைத்து விநியோகித்ததாகவும் இதனைத் தொடர்ந்து அதிபர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே குறிப்பிட்ட மாணவர்கள் அழைக்கப்பட்டு பொலிஸாரினால் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago