2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் குடியேற வந்துள்ள சிங்கள மக்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

யாழ்ப்பாணத்துக்கு மீள்குடியேற்றத்துக்கென வந்துள்ள சிங்கள மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடினார்.

திடீரென யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள இவர்கள் இங்கு தாம் மீள்குடியேறப் போவதாக அறிவித்துள்ளநிலையில் யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ளனர்.

இவ்வாறு வருகைதந்துள்ள சுமார் 80 குடும்பங்கள் தம்மை மீள்குடியேற அனுமதிக்குமாறு யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் தெரிந்ததே.

இந்நிலையில் இன்று காலை அங்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X