2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்களுக்கு மீள் நியமனம் வழங்க கோரிக்கை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

யாழ் மாவட்டத்தில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அந்த இடங்கள் அரசாங்கத்தினால் நிரப்பப்படும் வரையில் ஓய்வு பெற்ற கிராம அலுவலர்கள் மீள் நியமனம் செய்யப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு கிராம அலுவலர் சங்கம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம அலுவலர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிகைகளை மேற்க்கொண்டுள்ளார்.

வடக்கு கிழக்கு கிராம உத்தியோகத்தர் சங்கம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக கிராம அலுவலர் சங்கப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின்போது பின்வரும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. கிராம அலுவலர்களுக்காக வழங்கப்படும் சீருடைகள் மற்றும் காகிதாதிகளுக்கான கொடுப்பனவுகளை நேரத்துடன் வழங்க வேண்டும்.
 
கிராம அலுவலர்களின் அலுவலகங்களில் இருக்கும் தளபாடங்கள் பொது மக்கள் அலுவலகத்திற்கு சமூகம் கொடுக்கும் வேளைகளில் இருப்பதற்கு போதியனவாக இல்லை. அதனால் மேலும் கதிரைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்க்கப்பட்டுள்ளது.

கிராம மட்டத்தில் அரச அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்க்கொள்ளப்படும் அனைத்து வேலைகளுக்கும் கிராம அலுவலர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X