Super User / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
பாஷையூர்ப் பகுதிக்கான குழாய் மூலமான குடிதண்ணீர் விநியோகம் கடந்த புதன்கிழமை முதல் சீர்குலைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
விஷமிகளின் செயலாலேயே பாஷையூர் மக்கள் இத்தகைய அவலத்தை எதிர்கொள்வதாகக் கூறப்படுகின்றது.
குடிதண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்ற காரணத்தினால் பாஷையூருக்கு குழாய் மூலமாகவே குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தமது அன்றாடத் தேவைகளுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படும் நன்னீரையே நம்பியிருந்தனர்.
எனினும், கடந்த புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் பாஷையூர் பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்கவெனப் பொருத்தப்பட்டுள்ள குழாய்களை விஷமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.
இதன் காரணமாகவே இந்தப் பகுதிக்கான குடிதண்ணீர் விநியோகம் கடந்த 5 தினங்களாக முற்றாகத் தடைப்பட்டுள்ளன. இதனால் தூர இடங்களுக்கு சென்று குடங்கள் முதலான பாத்திரங்களில் நன்னீரை அள்ளிவர வேண்டிய நிலைக்கு பாஷையூர் மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விரைவில் சேதமடைந்த குழாய்களை சீர்செய்து, பாஷையூருக்கான குடிநீர் விநியோகத்தை வழமைபோல மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago