Super User / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் வாழ்வாதாரத் திட்டப் பிரிவினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இதில் முதற்கட்டமாக 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு சாவகச்சேரி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் 40 பயனாளிகளுக்கான சுயதொழில் உதவிகளாக கோழிக்கூடுகள், தச்சுத்தொழில் உபகரணங்கள், 25ஆயிரம் ரூபா பெறுமதியான சில்லறை வியாபாரப் பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
இதில் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் வாழ்வாதாரத் திட்ட இணைப்பாளர் எஸ். திருக்குமரன், நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், சாவகச்சேரி பிரதேச செயலர் எஸ். ஸ்ரீனிவாசன், சாவகச்சேரி உதவித் திட்டப்பணிப்பாளர் எஸ். ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



36 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
2 hours ago