Super User / 2010 நவம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
பதவியேற்று மூன்று மாதகாலத்தில் பனை அபிவிருத்தி சபை புதிய அபிவிருத்திப் பாதையை நோக்கி செல்வதாக புதிய பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது.
புதிய பணிப்பாளர் சபை ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டு மூன்று மாதங்களே நிறைவு பெற்றுள்ளது . இந்நிலையில் செயற்பாடுகள் தொடர்பாகச் சபை குறிப்பிடும் போது:
பனை அபிவிருத்தி சபையின் புதிய பணிப்பாளர் சபை தெரிவு நியமனம் செய்யப்பட்டு மூன்று மாத கால இடைவெளியில் சுமார் 440 பேருக்கு கிராம மட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
கிராமங்கள் தோறும் உற்பத்திக் குழுக்கள் அமைக்கப்பட்டதன் மூலம் இந்த பனம் தொழில் முயற்சியில் புதிய தொழில் முயற்சியாளர்களாக 83 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பெண்களுக்கு இந்த தொழில்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
தற்போது தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களின் தரத்தை உயர்த்தும் முகமாக அவர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்கி உற்பத்தியை அதிகரிப்பதுடன் பொருள்களின் தரத்தை மேம்பபடுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago