Suganthini Ratnam / 2010 நவம்பர் 19 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள வடபகுதி இளைஞர், யுவதிகளின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு இளைஞர் விவகார அமைச்சும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இணைந்து துறைசார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஸ்தாபிக்கப்பட்டு 21 வருட நிறைவைக் குறிக்கும் முகமாகவே, இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிப்படைந்த இளைஞர,; யுவதிகளின் ஆற்றல்களை வலுப்படுத்தி இந்த திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் உட்பட 850 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட துறைகள் சார்ந்த தொழில் பயிற்சிகளும் இதன் மூலம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் வழிகாட்டலுடன், உளரீதியான உதவிகள் வழங்கப்படும் அதேவேளை அங்கவீனர்களான பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமெனவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கான இந்த மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான நிதியினை பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் டென்மாக் அரசாங்கங்கள் வழங்க முன்வந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago