Suganthini Ratnam / 2010 நவம்பர் 19 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி)
நீதியமைச்சின் செயற்றிட்டம் நடத்தும் நடமாடும் சேவையானது சாவகச்சேரியில் எதிர்வரும் 27ஆம் திகதியும் கோப்பாயில் எதிர்வரும் 28ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாக நீதியமைச்சின் ஆலோசகர் எம்.திருநாவுக்கரசு இன்று தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இந்த நடமாடும் சேவையானது, சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியிலும் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நடமாடும் சேவையூடாக சட்ட ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவுள்ளதுடன், யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ் பிரதிகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் எம்.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
இந்த நடமாடும் சேவையில் நீதியமைச்சின் செயலாளர் சுகத கம்லத் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன், தன்னுடன் மேலதிக பதிவாளர் நாயகம் என்.சதாசிவ ஐயர், ஓய்வூதியத் திணைக்கள பணிப்பாளர் திருமதி அபயவிக்கிரம, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட உத்தியோகத்தர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர், வடமாகாண காணி ஆணையாளர் பி.தயானந்தன், கச்சேரி மற்றும் பிரதேச செயலக அலுவலர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago