Super User / 2010 நவம்பர் 20 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா, ஹேமந்த, கவிசுகி)
யாழ் நல்லூரில் இருந்து முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காகச் சென்ற தம்பதியினர் படையினரின் வாகனத்துடன் மோதி பலியாகியுள்ளனர்.
மாங்குளத்தில் இருந்து வந்த படையினரின் வாகனமும் இத்தம்பதியின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் ஸ்தலத்திலேயே குறித்த தம்பதிகள் உயிரிழந்துள்ளனர்.
நல்லூர் செட்டித்தெருவைச் சேர்ந்த பவுண்ராஜா செல்வராஜா (52) மற்றும் அவருடைய மனைவி செல்வராஜா நகுலேஸ்வரி (48) ஆகியோரே பலியானவர்கள்.
இதேவேளை இவ்விபத்தில் காயமடைந்த எட்டு படையினர் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த இராணுவ வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago