Super User / 2010 நவம்பர் 22 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மத்திய மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டால் யாழ். மிருசுவில் ரயில் நிலையம் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
இதற்காக 20 மில்லியன் ரூபாவை மத்திய மாகாண சபை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை மிருசுவில் பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிடவுள்ளனர்.
ரயில் நிலையத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கென 20 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை அன்றைய தினம் மத்திய மாகாண முதலமைச்சர் டிக்கிரி கொப்பேகடுவ தன்னிடம் கையளிக்கவூள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
ரயில் நிலைய நிர்மாணப் பணிக்கான கேள்விப்பத்திரம் வடமாகாண சபையினால் வெகுவிரைவில் கோரப்படவுஇள்ளதாகவும் மூன்று மாத காலத்திற்குள் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
19 minute ago
21 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
29 minute ago
38 minute ago