Kogilavani / 2010 நவம்பர் 24 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஐ.கிருஷ்ணன்)
வட மாகாண கல்வி திணைக்களத்தின் மாகாண மட்ட ஆரம்பப் பிரிவு மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் நடைபெறவுள்ளது.
மாகாணக் கல்வி பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் வீ.இராசையா பிரதம அதிதியாகவும், மத்திய கல்வி அமைச்சின் ஆரம்பப் பிரிவு பணிப்பாளர் திருமதி அசோகா பண்டிதசேகர சிறப்பு விருந்தினராகவும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
தரம் 1 முதல் தரம் 5 வரையான வகுப்புகளில் தேசிய மற்றும் மாகாண மட்டப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும், ஐந்தாம் தரம் புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களும் இந்நிகழ்வில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
தென்மராட்சி கல்விவலயத்தைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகளின் அதிபர்களையும் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கு.பிரேமகாந்தன் அறிவித்துள்ளார்.
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago