Kogilavani / 2010 நவம்பர் 25 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் நிலையத்தினால் நடத்தப்பட்ட ஒருவருட கால டிப்ளோமா பயிற்சிநெறி மற்றும் குறுகிய கால பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.
பயிற்சிநெறி இணைப்பாளர் சி.தேவானந் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஒரு வருடகால டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஆறு மாணவர்கள், குறுகிய கால பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த 141 மாணவர்கள், ஒரு வார கால முழு நேர பயிற்சி நெறியை மேற்கொண்ட 30 மாணவாகள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சண்முகலிங்கன், பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி என்.ஞானக்குமார், ஊடகவள நிலைய பதில் பணிப்பாளர் விமல் சுவாமிநாதன் மற்றும் லண்டனில் இருந்து வருகை தந்த ஊடகவியல் பயிற்றுவிப்பாளர் பியானோ பாட்டர்ன் ஆகியோர் அம் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.


11 minute ago
13 minute ago
21 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
21 minute ago
30 minute ago