Super User / 2010 நவம்பர் 25 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த)
வலி வடக்கு பகுதியில் உள்ள மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 08ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஜே 221, ஜே 222, ஜே 223 ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளிலேயே மக்கள் குடியமர்த்தப்படவுள்ளனர்.
மீளக் குடியமரும் மக்களுக்கான உதவித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
11 minute ago
13 minute ago
21 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
21 minute ago
30 minute ago