2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கணவனுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை

Super User   / 2010 நவம்பர் 25 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவி சுகி)

யாழ்ப்பாணம் - கொக்குவில் நந்தாவிலைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொக்குவில் பகுதியைச் செந்த  சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 33 வயதான பெண்ணொருவரே தற்கொலை செய்துள்ளார். குடும்பப் பிரச்சினையொன்றின் காரணமாக இவர் கணவருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது  தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.அரியநாயகம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மரண விசாரணைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X