Super User / 2010 நவம்பர் 25 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
சிந்தனைக் கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு,அபிவிருத்திக்கான அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிறுவன மண்டபத்தில் அரசியலமைப்புக்கான 18 ஆவது சீர்திருத்த மும் உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலமும் எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.
ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கான இயக்கத்தின் பணிப்பாளரும் பிரபல அரசியலமைப்புச் சட்ட வல்லுனருமான சட்டத்தரணி எஸ்.ஜி.புஞ்சிஹேவா மேற்படி செயலமர்வில் பிரதான உரையை ஆற்றவுள்ளார்.
காலையும் மாலையும் இடம்பெறவுள்ள இச் செயலமர்வில் காலை 9.30 மணிக்கு அரசியலமைப்புப் பற்றியும் பிற்பகல் 2.30 மணிக்கு உள்ளூராட்சி சட்டத்திருத்தங்கள் பற்றியும் உரைகள் இடம்பெறவுள்ளன.
உரைகளைத் தொடர்ந்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று மக்கள் அபிப்பிராய அறிக்கை தயாரிக்கப்பட்டு பொருத்தமான இடங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்படும் என சிந்தனைக் கூட அமைப்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவிக்கின்றார்.
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago