A.P.Mathan / 2010 நவம்பர் 27 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)
இந்திய உதவியில் அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் இன்று சனிக்கிழமை நாட்டிவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் அரியாலை - புங்கன்குளம் பகுதியில் இந்த வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல்லை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.என்.கிருஸ்ணா நாட்டினார்.
இந்த நிகழ்வில் இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார் முருகேசு, விஜயகலா, சில்வெஸ்டர் அலன்டின், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள், பிரதேச செயலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago