2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் நீதியமைச்சின் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 28 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

நீதியமைச்சின் செயற்றிட்டம் நடத்தும் நடமாடும் சேவையானது நேற்று சனிக்கிழமை சாவகச்சேரியிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை கோப்பாயிலும் நடைபெற்றதாக நீதியமைச்சின் ஆலோசகர் எம்.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நடமாடும் சேவையில் சுமார் 1400 பேரும்  நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 1500 பேரும் கலந்துகொண்டதாகவும்   அவர் கூறினார்.

இந்த இரு நாள்களிலும் நடைபெற்ற நடமாடும் சேவையில் யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட 1500 பேர் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர். பிறப்பு,  இறப்பு சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ் பிரதிகள் ஆகியவற்றிற்கு  விண்ணப்பித்த இரண்டாயிரம் பேரில் 500 பேருக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும்  எம்.திருநாவுக்கரசு தெரிவித்தார். காணி சம்பந்தாக ஐம்பதுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 58 பேருக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அத்துடன்,   இன்றையதினம் 60 முதியோர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.


இந்த நடமாடும் சேவையில்  தன்னுடன்  மேலதிக பதிவாளர் நாயகம் என்.சதாசிவ ஐயர்,  ஓய்வூதியத் திணைக்கள பணிப்பாளர் திருமதி அபயவிக்கிரம, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்;. பிராந்திய அதிகாரிகள்,  வடமாகாண காணி ஆணையாளர் பி.தயானந்தன்,  கச்சேரி மற்றும் பிரதேச செயலக அலுவலர்கள், மத்தியஸ்த சபை தவிசாளர் ஆகியோர் கலந்துகொண்டனரெனவும்  எம்.திருநாவுக்கரசு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X