2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புத்தூரில் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 29 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி, நவம்)
 
வலிகாமம் கிழக்கிலுள்ள புத்தூர் பகுதியில் குளத்தில் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதன்போது, ஏனைய 9 மாணவர்களும் மயிரிழையில் உயிர் தப்பினர்.  

புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியைச் சேர்ந்த  மாணவர்களே குளத்தில் குளிக்கச் சென்றபோது,  நீரில் மூழ்கியுள்ளனர். இம்மாணவர்கள் 9ஆம் வகுப்பில் கல்வி கற்பவர்கள் ஆவர்.  

14 வயதுடைய செல்வராஜா மதுபாலேஸ்வரன் என்ற மாணவனே நீரில் மூழ்கி உயிரிழந்தவர் ஆவர். இவரது சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று பாடசாலை விடுமுறையென்பதால், இம்மாணவர்கள் பிற்பகல் 3.00 மணிக்கு பாடசாலை முடிந்து வீடு செல்லாது குளத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.  

இக்குளம் நீண்டகாலமாக பாவிக்கப்படாது இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X