2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கைதடி சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் திருட்டு

Super User   / 2010 நவம்பர் 30 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கைதடி சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைதடிச்சந்தியிலுள்ள இரண்டு இரும்பு கட்டிடப்பொருட்கள் மற்றும் தளபாட விற்பனை நிலையங்கள் மற்றும் ஒரு மதுபான விற்பனை நிலையம் ஆகிய மூன்று வர்த்தக நிலையங்களலுமே திருட்டு இடம்பெற்றுள்ளது.

வழமைபோல இன்றைய தினம் காலை 7.30 மணியளவில் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வர்த்தக நிலையங்களை திறந்தபோதே வர்த்தக நிலையங்களிலிருந்த பொருட்கள் யாவும் கிளறி ஏறிப்பட்டிருந்ததை அவதானித்ததாக வர்த்தகர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X