Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 01 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(தாஸ்)
வலிவடக்குப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள 3 கிராமசேவையாளர் பிரிவுகளிலும் மக்களின் வேண்டுகோளுக்கமையவே இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மண் அணைகள் அகற்றப்படுமென தெல்லிப்பளை பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு வித்தகபுரம் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கான கலந்துரையாடலொன்று நேற்று செவ்வாய்கிழமை பன்னாலையில் நடைபெற்றது. இதன்போதே, அவர் இதனைக் கூறினார்.
இந்நிகழ்வில் வடக்கின் துரித மீட்சித்திட்ட உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரி தெல்லிப்பளை பிரதேச செயலக அதிகாரிகள், செண்ட் நிறுவன மிதிவெடி அபாயக்கல்வி அதிகாரி, அரசசார்பற்ற பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் பொருட்களை வெளியேற்ற வேண்டாமெனவும் குறித்த பகுதிகளிலுள்ள காணிகள், கிணறுகள், வீதிகள்; வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் மூலம் புனரமைக்கப்பட்ட பின்னர் குடியேற அனுமதிக்கப்படும்.
இப்பகுதியில் தடையின்றி சென்றுவர முடியும். எனினும் இப்பகுதியில் கண்ணிவெடி மற்றும் வெடிபொருட்கள் காணப்படின் உடனடியாக பிரதேச செயலகத்தில், கிராம அலுவலர், மாவட்ட செயலக கண்ணிவெடிப் பிரிவுக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.
.jpg)
6 minute ago
7 minute ago
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
7 minute ago
27 minute ago
3 hours ago