Menaka Mookandi / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் பழைய கட்டிடங்களை இடித்தகற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த பொதுமகன் ஒருவர் கட்டிட இடிபாடுகளில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 33 வயதுடைய டேனியன் தேவன் என்ற நபரே உயிரிழந்தவராவார். பருத்தித்துறை, சக்கொட்டியைச் சேர்ந்த இவர் இரண்டு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
பழைய கட்டிடம் ஒன்றை இடித்தகற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில், அந்த கட்டிடம்; பணியாளர்கள் மீது இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரழந்தவரின் சடலம் சாவகச்சேரி காவல் துறையினரால் மீட்கப்பட்டு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
7 minute ago
9 minute ago
17 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
17 minute ago
26 minute ago