Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
மல்லாகம் கோணப்புலம் வைரவர் ஆலயத்திலிருந்து சுமார் ஜம்பது வருடங்களுக்கும் முற்பட்ட ஜம்பொன் வேல் மற்றும் ஒரு சோடி குத்துவிளக்கையும் திருடர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
இரவு நேரத்தில் கொட்டும் மழையை சாதகமாகப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்திருட்டுச் சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரவு நேரம் பெய்த மழையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள், ஆலயத்தின் மதில் மேல் ஏறிப்பாய்ந்து உள்ளே சென்று பழமையான வேல் மற்றும் குத்துவிளக்கையும் திருடினர்.
பின்னர், வைரவரின் மூலஸ்தானத்தை பிரட்டிய திருடர்கள், அவ் ஆலயத்தின் ஏனைய இடங்களிலும் தேடுதல் மேற்கொண்டனர். எனினும், வேறு பொருட்கள் கிடைக்காத நிலையில் திருடர்கள் சென்றுள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஆலய தர்மகத்தா சபையினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
19 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago