2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காதல் ஜோடிக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)
    
ஆட்கள் இல்லாத பற்றைவளவில் ஒழுங்கீனமாக நடக்க முற்பட்ட  காதல் ஜோடியொன்று இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

இந்த பற்றைவளவு இத்தகைய செயலகளுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுவதாக புகாரிடப்பட்ட நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுன்னாகம், மயிலனிப் பகுதியில்  நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனியார் வளவில் காணப்படும் பற்றையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி கள்ளக் காதல் புரிந்தவர்கள் தகவலொன்றின் அடிப்படையில் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டனர்.  

இவர்களை  விசாரணை செய்த இராணுவத்தினர்,    இனிமேலும் இவ்வாறான  சம்பவங்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று எச்சரித்து விடுவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X