A.P.Mathan / 2010 டிசெம்பர் 02 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 20 வருடங்களின் பின்னர் மீளக் குடியேறியுள்ள மக்கள் கண்ணிவெடிகள் குறித்து அவதானத்துடன் செயற்படவேண்டும் என தெல்லிப்பழைப் பிரதேச செயலர் எம்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கில் மீள் குடியமர்ந்த மக்களுக்கான மிதிவெடி அபாயம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பன்னாலை சேர். கனகசபை அ.த.க. பாடசாலையில் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...
மீள்குடியமர்ந்த மக்கள் இலகுவானமுறையில் போக்குவரத்து மேற்கொள்வதற்கென வீதிகள் நிச்சயம் புனரமைத்துத் தரப்படும். குறுகிய காலத்தில் இப்பிரதேசத்திலுள்ள அனைத்து வீதிகளும் புனரமைப்புச் செய்வது இயலாத ஒன்று. எனவே முக்கியமான சில வீதிகளின் புனரமைப்புப் பணிகள் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றார்.
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago