2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இடமாற்றம் பெறும் ஆசிரியர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

Kogilavani   / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பான விபரம் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் கடமையைப் பொறுப்பேற்கவேண்டுமென வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு மாகாண கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான இடமாற்றம் பட்டடியல்  மீளாய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மாவட்டங்களுககிடையில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் விபரங்கள் சகல வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே இடமாற்றம்பெற்ற ஆசிரியர்களுக்கு தற்போது கடமையாற்றும் கல்வி அலுவலகங்கள் 2010 டிசம்பர் 31ஆம் திகதியுடன் விடுவிக்கப்படுவதாக கடிதம் மூலம் அறிவிக்கும்.

இதேவேளை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள வலயக்கல்வி அலுவலங்களுக்குரிய ஆசிரியர்களுக்கு 2011ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கடமையைப் பொறுப்பேற்பதற்கான கடிதத்தினை வழங்குவார்கள் என அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X