Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 03 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன், கிருஷ்ணன்)
சாவகச்சேரி, புத்தூர் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வீதியிலிருந்த வாகனங்களை தாக்கி உடைத்த நபர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அந்நபர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த நபர் போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனங்களை இரும்புக் கம்பியால் தாக்கி உடைத்ததுடன், அதனை தடுக்க முற்பட்ட இராணுவ வீரர் ஒருவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
மற்றொரு இராணுவ வீரரையும் தாக்க முற்பட்ட அந்நபர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனால், குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மேற்படி நபரின் தாக்குதலில் காயமடைந்த 22 வயதான எம்.டி.சில்வா எனும் இராணுவ வீரர் யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago
koneswaransaro Saturday, 04 December 2010 02:11 PM
கையில் இரும்புக் கம்பியை மாத்திரம் வைத்துக் கொண்டிருந்தவரைக் மடக்கிப் பிடிக்க முடியாமல் சுட்டுக் கொலை செய்தது நம்பும் படியாகவா இருக்கிறது?
Reply : 0 0
sujan Saturday, 04 December 2010 02:19 PM
மார்கழி 03 சர்வதேச ஊனமுற்றோர் தினம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago