Super User / 2010 டிசெம்பர் 04 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
துப்பாக்கிகள் சகிதம் துணிகரமான முறையில் வீட்டில் நழைந்த கொள்ளையர்கள்m வீட்டுக்காரர் முரண்பட்டதைத் தொடர்ந்து வீட்டில் நின்ற நாயை சுட்டுக்கொன்றுவிட்டு பல லட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இரவு இரவாக கொட்டும் மழையை பயன்படுத்திய கொள்ளையர்கள் தெல்லிப்பளை அளவெட்டியில் துப்பாக்கி முனையில் நடத்திய கொள்ளையினால் அப்பகுதி மக்களிடையே பலத்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 8.00 மணியளவில் துப்பாக்கிகள் சகிதம் வந்த வாள்கள் அளவெட்டிக்குச் செல்லும் எட்டாம் கட்டை வீதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதேவேளை குறிப்பிட்ட பகுதியின் ஊடாக பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் சிலரும் கூட ஆயுத முனையில் மறிக்கப்பட்டு வீதியில் இறக்க வைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago