Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 09 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இலங்கையின் 63ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு நாட்டின் அபிவிருத்தியைக் குறிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட புதிய நாணயத்தாள்கள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் புழக்கத்திற்கு விடப்படவுள்ளதாக இலங்கை வங்கியின் யாழ். மேற்தரக் கிளையின் பிரதம முகாமையாளர் ஏ.கே..மகாதேவா தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டுக்குத் தேவையான நாணயத் தாள்களை இலங்கை மத்திய வங்கியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தற்போது எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, ஏனைய வங்கிகளுக்கு வழங்கப்படும் பணியை யாழ். ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மேற்தரக்கிளையே மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை வங்கியின் யாழ். மேற்தரக் கிளையின் பிரதம முகாமையாளர் தெரிவித்தார்.
11 minute ago
13 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
21 minute ago