Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்ட கடல்த் தொழிலாளர்கள் கடலுக்கு செல்வதற்கு அச்சமடைந்துள்ளதைத் தொடர்ந்து கடல் உணவுப் பொருள்களின் விலை யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
கடந்த வாரம் இந்தியாவிலிருந்து இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி, வடமராட்சி மற்றும் மாதகல் கடற்பரப்பில் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் இரு அரசாங்கங்களும் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, யாழ். மாவட்டத்திலிருந்து கடல் தொழிலுக்குச் சென்ற ஒரு தொகுதியினர் இந்திய மீனவர்கள் கைதான இரு நாள்களின் பின்னர் இந்தியக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மேலும் ஆறு பேர் கைதான நிலையில், தொழிலுக்கு செல்வதற்கு யாழ.; மாவட்ட மீனவர்கள் தயக்கம் காட்டுவதால் சந்தைக்கு வரும் மீன்களின்; அளவு குறைவடைந்துள்ளது.
இந்நிலையிலேயே, யாழ். குடாநாட்டுச் சந்தைகளில் மீன்களின் விலை மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
6 minute ago
11 minute ago
20 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
20 minute ago
20 minute ago