2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சாவகச்சேரியில் கடத்தல், கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2011 மார்ச் 08 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் பெண் படுகொலையொன்றுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர் இன்று மாலை சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேநபர், சாவகச்சேரியிலிருந்து கொழும்பு நோக்கி தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கமைய சாவகச்சேரி பொலிஸின் விசேட குழுவொன்று அவரைக் கைது செய்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவரை நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X