2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றத்துக்கு படையினர் அனுமதி: அரச அதிபர்

Menaka Mookandi   / 2011 மார்ச் 11 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள குரும்பசிட்டி கிழக்கு மற்றும் வயாவிளான் வடக்கு, கட்டுவன் தெற்கு, கொல்லங்கலட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றுவதற்கு பாதுகாப்பு படையினரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இப்பகுதி கிராமங்களில் மீள்குடியமர்வதற்கு 4,000 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த மக்களை அங்கு மீள்குடியேற்றுவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறினார்.

தற்போது இந்தப் பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான சகல நவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் மேலும்  தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X