Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 15 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் கூடிங் தலைமையிலான பிரித்தானிய இராஜதந்திரிகளின் குழு, வடக்கில் இராணுவத்தில் செயற்பாடுகள் பற்றி திருப்தி தெரிவித்துள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
இவர்கள் இரண்டுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். இராணுவம் யாழ்ப்பாணத்தில் மரபு ரீதியாக வகித்துவந்த பாத்திரத்தை மாற்றி மக்களின் நலனை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் சேவை புரியும் இராணுவமாக மாறியுள்ளதாக இராஜதந்திரிகள் கூறியதாக ஹத்துருசிங்க தெரிவித்தார்.
நிலக்கண்ணிகள் விரைந்து அகற்றப்பட்டமை தொடர்பிலும், இடம்பெயர்ந்தோர் நேரகாலத்தோடு மீள்குடியேற்றம் செய்யப்பட்டமை குறித்தும்; கூடிங் தன் திருப்தியை தெரிவித்தார். யாழ்ப்பாணத்தின் முன்னைய பெருமையை மீண்டும் கொண்டுவரும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இராணுவத்தினர் வழங்கும் பங்களிப்பை அவர் பாராட்டினார்.
இக்குழுவினர் யாழ்ப்பாண அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநர், சிவில் சமூக அங்கத்தவர்கள், யாழ்ப்பாணம் பிஷப், வர்த்தக சேம்பரின் உத்தியோகத்தர்கள் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.
இவர்கள் தெல்லிப்பளை புனர்வாழ்வு மையத்துக்கு செல்வதுடன் தெல்லிப்பளையில் புதிதாக குடியேறியவர்களையும் பார்வையிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago